கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நாகசந்த்ரா (Nagasandra) மெட்ரோ நிலையம் சனிக்கிழமை மக்கள் திரளால் ஸ்தம்பித்துப் போனது. ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என விசாரித்து பார்க்கையில்தான் தெரிய வந்தது மொத்தக் கூட்டமும் பர்னிச்சர் வாங்க வந்த கூட்டம் என்று. பிரபல பர்னிச்சர் கம்பெனியான IKEA, தனது புதிய கிளை ஒன்றை நாகசாண்ட்ரா பகுதியில் திறந்ததே மக்கள் படையெடுக்கக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
ஸ்வீடனை மையமாகக் கொண்ட வீட்டு உபயோக பொருள்களுக்கான பிரத்யேக ஷோரூம் நிறுவனமான இதன் பெங்களூரு கிளையை ஜூன் 22-ம் தேதி கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். டெல்லி, நவி மும்பைக்கு அடுத்து இந்தியாவில் அமைந்த மூன்றாவது கிளை இது.
சராசரியாக நாகசந்த்ரா மெட்ரோ நிலையத்துக்கு 13,000 பயணிகள் (பச்சை வழித்தடத்தில்), 16,000 ஏறும் இறங்கும் பயணிகள் (ஊதா வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறுபவர்கள்) என்ற எண்ணிக்கையிலேயே மக்கள் பயணிப்பர். இந்த எண்ணிக்கை முறையே 23,878 பயணிகளாகவும், 30,067 பயணிகளாகவும் ஜூன் 25 அன்று உயர்ந்தது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App