தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயன் மீது கடத்தல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து முதல்வர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக காங்கிரஸ் அலுவலகங்கள்மீது சி.பி.எம் தரப்பு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு சில சி.பி.எம் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் எக்கோ சென்சிட்டிவ் சோனுக்கு எதிராக பேரணி நடத்திய எஸ்.எஃப்.ஐ தொண்டர்கள் ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறும்போது, “முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் மாநில முதல்வர், மத்திய பா.ஜ.க அரசை சந்தோஷப்படுத்த இதுபோன்று தாக்குதல் நடத்த குண்டர்களை அனுப்பியிருக்கிறார். கேரளாவில் கலவரத்தை ஏற்படுத்த பினராயி விஜயன் முயல்கிறார்” என்றார்.
ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக காங்கிரஸ் போராட்டத்தில் குதித்திருப்பதால் கேரளாவில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App