பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்த நாட்டுக்குச் செல்கிறாா். இந்த ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதனால் பிரதமா் மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்தால், இஸ்லாமிய நாடுகளின் கண்டனத்துக்கு மோடி அரசு ஆளாகியிருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படும் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பைடன் பேசுவாரா என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், “ஜோ பைடன் எந்த விவகாரத்தையும் நேரடியாக பேசக் கூடியவர். மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் பேசுவதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. இது போன்று கடந்த காலங்களிலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து நேரடியாகப் பேசியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அழுத்தம் கொடுப்பாரா என்பதை பற்றி அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App