Sun. Jul 3rd, 2022
0 0
Read Time:5 Minute, 37 Second

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரள அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் தேகத்தை உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த நிலையில், மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் கேரள முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் , சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தை எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட கேரள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் நகரின் முதன்மையான நீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது, ​​கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தேவையான 265 எம்.எல்.டி நீர் தேவையில், 101.40 எம்.எல்.டி., சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது என்பதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே 19.08.1973 அன்று 1.30 டிஎம்சிக்கு மிகாமல் ஆண்டுதோறும் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.

கேரள நீர்ப்பாசனத் துறையானது சிறுவாணி அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை 877.00 மீட்டராகப் பராமரித்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முழு நீர்த்தேக்க மட்டமான (எஃப்ஆர்எல்) 878.50 மீட்டராக உள்ளது. நீர்மட்டத்தை 1.5 மீட்டர் குறைப்பதால், 122.05 MCFT தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது, இது மொத்த சேமிப்பில் 19% ஆகும். இதனால் கோடை மாதங்களில் கோவை நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் 1.30 டிஎம்சி தண்ணீர் கிடைத்த நிலையில், 0.484 டிஎம்சி முதல் 1.128 டிஎம்சி வரை மட்டுமே மாநிலத்துக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.

சிறுவாணி அணையின் முழு நீர் சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரளா அதிகாரிகளிடம் தமிழக அரசின் குழு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இதுவரை கேரள நீர்ப்பாசனத் துறையால் அணையில் முழு அளவை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவை மாநகரம் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் கேரள முதலமைச்சர் மீண்டும் கவனம் செலுத்தி, சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தை எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை மட்டுமே உதவும் என்றும், இது தொடர்பாக சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கையால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.