Sun. Jul 3rd, 2022
0 0
Read Time:2 Minute, 48 Second

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நள்ளிரவில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடுவதாக வந்த தகவலையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மதணஅரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தில் ரயில்களை தீ வைத்து எரித்தும், சாலைகளை மறித்தும் பல வகையில் தங்களுடைய எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை தீவு திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கைது செய்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், மேற்கொண்டு இளைஞர்கள் பொது இடங்களில் கூடாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, ராணுவத்திற்கு சொந்தமான பகுதிகள் என சென்னையின் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் நள்ளிரவில் இளைஞர்கள் ஒன்றுகூடுவதாக வந்த தகவலையடுத்து, தி.நகர் துணை ஆணையர் ஆதர்ஸ் பச்சேரா மற்றும் வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் தீவு திடல் முதல் கடற்கரை விளக்கம் வரை 50 கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தி.நகர் துணை ஆணையர் ஆதர்ஸ் பச்சேரா, அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கூடுவதாக வந்த தகவலையாடுத்து ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் ராணுவத்திற்கு சொந்தமான பகுதிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.