Sat. Jul 2nd, 2022
1 0
Read Time:4 Minute, 13 Second

ஒற்றை தலைமை அமைப்பது தொடர்பான நடவடிக்கையை இபிஎஸ் தரப்பு கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது தற்போதைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்பதாக இல்லை. பொதுக்குழு நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ளது.

அதனால் தற்காலிகமாக ஒற்றைத் தலைமை பிரச்னையை கைவிடலாமா என்பது குறித்தும் ஈபிஎஸ் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இபிஎஸ் ஆதரவாளர்கள், இப்போதைக்கு இந்த பிரச்னையை கைவிட்டால் இனி இதுபோன்ற ஒரு வாய்ப்பு அமைவது கஷ்டம் என்ற நிலையையும் எடுத்துக் கூறியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை பிரச்னையில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஓபிஎஸ்சும், ஒற்றைத் தலைமைக்கு சம்மதம் தெரிவிப்பதாக இல்லை. இரட்டை தலைமை தான் நீடிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். இரண்டு பேரும் விட்டுக்கொடுக்காத பட்சத்தில் பொதுக்குழுவில் பிரச்னை ஏற்படும் சூழல் நீடிக்கிறது.

பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களில் ஒற்றை தலைமை விவகாரம் சேர்ப்பதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று தீர்மானத்தை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு, கூட்டத்திற்கு பின் ஒற்றைத் தன்மை அமைப்பது தொடர்பான தீர்மானத்தை தவிர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு மாறாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது அவைத்தலைவர் மூலமாக தனி தீர்மானத்தை முன்மொழிய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும், சட்ட சிக்கல்களை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை பொருத்தமட்டில் பெரும்பாலானோர் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதேபோல் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் பெரும்பாலானோர் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் அதிமுக சட்ட விதிகள் படி அதற்கான பணிகளில் ஈடுபடவும் ஈபிஎஸ் தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பிலும் ஒற்றை தலைமை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் அவற்றை எதிர்ப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இன்று தொடர்ந்து 6-வது நாளாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் சமாதானப்படுத்தி தீர்மானத்தை எந்தவித எதிர்ப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்ற தொடர்ந்து இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.