Sat. Jun 25th, 2022
0 0
Read Time:5 Minute, 31 Second

தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிறகு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 6-ம் தேதி ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார் ஸ்வப்னா சுரேஷ். மேலும், முதல்வரின் கிளிஃப் ஹவுசில் பலமுறை முதல்வர் பினராயி விஜயனையும், அவரின் குடும்பத்தினரையும் பலமுறை சந்தித்திருக்கிறேன் எனவும், அதற்கான ஆதாரங்களையும், தனது வாக்குமூலம் குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் கூறிவந்தார். இந்த நிலையில் ஸ்வப்னா கோர்ட்டில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்வப்னா சுரேசின் வாக்குமூலத்தில், “2017-ல் ஷார்ஜா அரசு அதிகாரி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அவர் கோழிக்கோட்டுக்கு வருவதாக இருந்தது. பின்னர் நிகழ்ச்சி திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தில் வைத்து முதல்வர் பினராயி விஜயனும், அவரின் குடும்பத்தினரும் ஷார்ஜா அரசு அதிகாரியை சந்தித்து பேசினார்கள். 2017 செப்டம்பர் 27-ம் தேதி கிளிஃப் ஹவுசில் முதல்வரின் குடும்பத்தினர் ஷார்ஜா அதிகாரியிடம் அரசு விவகாரம் அல்லாமல் தனிப்பட்ட சில பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அப்போது அங்கிருந்த நான் உள்ளிட்ட மற்றவர்களை அனுமதிக்காமல் பினராயி விஜயனின் மனைவி, அவரின் மகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சிவசங்கர், நளினி நட்டோ உள்ளிட்டவர்கள் மட்டும் பூட்டிய அறையில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

ஷார்ஜாவில் மகளின் ஐ.டி பிசினஸை தொடங்குவது சம்பந்தமாக அந்த அரசு அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஷார்ஜா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை தொடர்புகொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். ஷார்ஜா அரசு அதிகாரியின் மனைவி உள்ளிட்டவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த பிசினஸ் பேச்சுவார்த்தை பாதியில் கைவிடப்பட்டது. இந்த விஷயங்கள் ஷார்ஜா அதிகாரி கோவளத்துக்கு வந்த சமயத்தில் எனக்கு தெரியவந்தது. பிசினஸ் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஷார்ஜா அதிகாரியின் மனைவிக்கு ஒரு பரிசு அளிக்க பினராயி விஜயன் தரப்பு முயன்றது. அதற்கு அந்த அதிகாரியின் மனைவி சம்மதிக்கவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்தில் இருந்து சாதாரண பிரியாணி பாத்திரத்தை விட பெரிய அளவில் உள்ள பாத்திரத்தில் பிரியாணி என்ற பெயரில் முதல்வரின் கிளிஃப் ஹவுசுக்கு பார்சல்கள் அனுபப்பட்டன. அந்த பார்சல்கள் பாயில்ட் பேப்பரால் சுற்றப்பட்டிருந்தன. அதனால் அதில் என்ன இருந்தது என அதை எடுத்துச் சென்றவர்களால் கூட பார்க்க முடியாது. அந்த பிரியாணி பாத்திரத்தை நான்குபேர் தூக்கிச் சென்றனர். சாதாரண காரில் கொண்டு செல்ல முடியாததால் தூதரக அதிகாரியின் காரில் கொண்டுச்செல்லப்பட்டது. இவ்வளவு ஒரு பெரிய பிரியாணி பாத்திரம் அங்கு செல்வதற்கு சிவசங்கர் வழிகாட்டியாக இருந்தார்” என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிரியாணி பாத்திரத்தின் அளவுகளையும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வப்னா சுரேஷ். ஸ்வப்னா கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலம் வெளியானதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.