Sat. Jul 2nd, 2022
0 0
Read Time:1 Minute, 34 Second

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர செல்வத்திடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், துரோகிகளிடம் ஒப்படைக்காதீர்கள், அதிமுகவின் ஒற்றை தலைமை நீங்கள் என கோஷங்களை எழுப்பினார்கள்.

சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை முதல் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும், ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதேநேரத்தில், ஓபிஎஸ்க்கு ஆதரவாக அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சிலர் கிழித்ததால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் தொண்டர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வீட்டுக்கு வெளியே காத்திருந்த ஆதரவாளர்களை சந்திப்பதற்காக, வீட்டைவிட்டு வெளியே வந்த பன்னீர் செல்வம, அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். அதில் அதிமுகவின் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என எழுப்பினர். மேலும் துரோகிகளிடம் கட்சியை ஒப்படைக்காதீர்கள் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.