சினிமாவில் சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்துக் கொண்டே சின்னத்திரைப் பக்கம் வந்தவர், நடிகை ஜூலி. விஜய் டிவியின் ‘ஜோடி’ நிகழ்ச்சியில் உடன் ஆடிய நடிகர் சாய் சக்தியுடன் செட் ஆகாமல் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினாரே, அவர்தான். ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இன்னொரு சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டதற்காக அந்த சீரியலில் இருந்தே கழட்டி விடப்பட்டது கூட நினைவிருக்கலாம்.
சீரியல் எதுவுமில்லாமல் சுமார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தவர், சமீபத்தில்தான் ஜீ தமிழ் சேனலில் ‘சத்யா’, ‘சித்திரம் பேசுதடி’ என இரண்டு சீரியல்களில் கமிட்டாகி பழையபடி பிஸியாகத் தொடங்கினார்.
ஆனால், யார் கண் பட்டதோ அதிலும் இப்போது சிக்கல்.
“‘சத்யா’ சீரியல் க்ளைமாக்ஸை நெருங்கிடுச்சு. ‘சித்திரம் பேசுதடி’ தொடரும் முடிஞ்சிடுச்சுன்னா, ‘அடுத்து என்ன’ங்கிற ஒரு கேள்வி முன்னாடி வருது. அதேநேரம் மறுபடியும் கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு” என்றவரிடம் பேசினேன்.
“நடிக்கத் தொடங்கி 25 வருசம் ஆகிடுச்சு. இன்னைக்கும் நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொல்றதையே ஒரு சாதனையாத்தான் பார்க்கேன். ஏன்னா, சீரியல்லாம் நாங்க வந்த காலத்துல இருந்த மாதிரி இல்லை. இன்னைக்கு நிறைய மாறிடுச்சு.
தமிழ் சீரியல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு வாய்ப்புத் தர்றதில்லைங்கிற பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னொரு பக்கம் ‘அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்’கிற பிரச்னை. சினிமாவை விட டிவியில இப்ப இது ‘ரொம்ப சாதாரணம்’கிற மாதிரி ஆகிடுச்சு.
புதுசு புதுசா நடிக்க வர்றவங்ககிட்ட ‘இதைப் பண்ணினா மட்டுமே நிறைய வாய்ப்பு கிடைக்கும்; பிரபலமாகலாம்’ங்கிற அளவுக்கு மூளைச் சலவை நடக்குது. அதனால அவங்கள்லயுமே சிலர் ‘இதெல்லாம் தப்பில்லை’ங்கிற மாதிரி நினைச்சுக்கிடறாங்க.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App