நான் சகஜமா அவர்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன். நான் உங்களை இமிடேட் பண்ணி பேசின வீடியோ ரொம்ப வைரலாச்சு சார்னு சொல்லிட்டே அவர் மாதிரி அவர் முன்னாடியே பேசிக் காட்டினேன். ரொம்ப ரசிச்சு சிரிச்சிட்டே பார்த்துட்டு இருந்தார். ஷூட்டே ஆரம்பிக்கல. ஆனாலும் பயங்கரமா அவருடைய வேலையில் சின்சியரா ரிகர்செல் பண்ணிட்டு இருந்தார். நான் அவரைப் பார்த்துட்டே அவர் அழகை ரசிச்சிட்டு இருந்தேன்.

ஃபோட்டோ எடுக்கணும்னு சொன்னதும் தனியா கூட்டிட்டு போய் என் தோள் மீது கை போட்டு ஃபோட்டோ எடுத்தார். என் மனைவி குறித்தும் விசாரிச்சார். நம்ம ரசிக்கிறது இயல்பு. நாம பேசுறதை அவர் ரசிக்கிறதெல்லாம் பெரிய விஷயம். அவர் நான் பேசுனதை அப்படி ரசிச்சார். என்னால நம்பவே முடியல. நான் பெருசா யாருடனும் போட்டோ எடுத்துக்க விரும்பமாட்டேன். நான் ஃபோட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்டது ரெண்டு பேர் கூடதான்! ஒன்று, அப்துல் கலாம் ஐயா இன்னொன்னு எம்எஸ் தோனி. அந்த ஆசை இப்ப நிறைவேறிடுச்சு.
இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச், ஐபிஎல் பற்றி எல்லாம் பேசினேன். எப்படி பிரஷர் ஹேண்டில் பண்றதுன்னு கேட்டதும் விளக்கமா அவர் எப்படி ஹேண்டில் பண்றாருன்னு சொன்னார். நான் விளையாடுற எல்லாருக்கும் பிரஷர் இருக்குமான்னு கேட்டப்ப, கேம்ல ஆடுற எல்லாருக்குமே நிச்சயமா பிரஷர் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கிட்டார். அவருடனான சந்திப்பு ரொம்பவே ஸ்பெஷல்!” என சிலாகித்தார் `படவா’ கோபி.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App