Last Updated : 14 May, 2022 08:21 AM
Published : 14 May 2022 08:21 AM
Last Updated : 14 May 2022 08:21 AM

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க ஏதுவாக சமீபத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திலிருந்து டோனி, ரீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக டாபர்மேன், லேப்ரடார் வகையைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த நாய்க் குட்டிகளுக்கு டாப்பி (DOBBY) மற்றும் பின் (FINN) என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று பெயர் சூட்டினார்.
இந்த நாய் குட்டிகளுக்கு 4 மாத அடிப்படை பயிற்சிகளை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் வழங்க உள்ளனர். அதன் பிறகு, குற்றச்சம்பவங்கள் தொடர்பான தனி பயிற்சிக்கு இவ்விரு நாய் குட்டிகளும் கோவை காவல் ஆணையரகத்துக்கு அனுப்பப்பட உள்ளன என, ஆவடிகாவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App