Sun. Jul 3rd, 2022
0 0
Read Time:3 Minute, 34 Second

சென்னை: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன்தினம் தள்ளுபடி செயதது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மதன் தரப்பு வழக்கறிஞர், பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின்படி அவருக்கு 3 மாதம்தான் தண்டனை வழங்க முடியும். எனவும் ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது காவல்துறை தரப்பில், மதனின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.