சென்னை: மழைநீர் வடிகாலில் விதிகளை மீறி 2,217 கழிவுநீர் இணைப்புகள் உள்ளதாகவும், இதில் 1,405 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 8,835 எண்ணிக்கையில் 2,071 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால் உள்ளது. இதில், சில வீடுகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, ’மாநகராட்சி உதவி அல்லது இளநிலை பொறியாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், தூய்மைப் பணி ஆய்வாளர், சாலை பணியாளர்கள் கொண்ட குழு, வார்டு வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தினசரி ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,217 இடங்களில் மழைநீர் வடிகாலில் சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதில், 1,405 இடங்களில் துண்டிக்கப்பட்டு, 9.58 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, பெருங்குடி மண்டலத்தில் 374, அண்ணநகர் மண்டலத்தில் 204, தண்டையார்பேட்டையில் 193 இடங்களில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App