கரூர்: குளித்தலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 66 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆர்ச்சம்பட்டி சேவை காலனியைச் சேர்ந்தவர் காளிமுத்து (66). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கடந்தாண்டு ஜனவரி 11 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் காளிமுத்தை கைது செய்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் இன்று (மே 10ம் தேதி) நீதிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் காளிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App