சென்னை: புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படும் என்று சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று நிதித் துறை, மனித வள மேம்பாடு, புதிய முயற்சிகள் துறை துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட துறை அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்:
நிதித் துறை:
> கருவூலம், கணக்குத் துறை, ஓய்வூதியம், சிறு சேமிப்புகள் ஆகிய துறைகள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
> தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவனம், மின்விசை அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சீரமைக்கப்படும்.
> ரூ.10 கோடி செலவில் மாநில பொது நிறுவன கழகம் வலுபடுத்தப்படும்.
> நிதி பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.
மனித வள மேம்பாடு
> அரசு போட்டித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த செயலி.
> மாநில குடிமைப்பணி அலுவலர்களுக்கு இடைக்கால பயிற்சி
புதிய முயற்சிகள் துறை
> நீடித்த வளர்ச்சி இலக்குள் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்
> மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தின் நீட்டிப்பு பகுதிகள் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
> பூந்தமல்லி முதல் திருபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படும்
> திருமங்கலத்தில் இருந்து ஆவடி வரை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படும்
> சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படும்
> சென்னை ஒருங்கிணைந்த நகர போக்குவரத்து திட்டத்தின் கீழ் புறநகர் ரயில்களை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
> சென்னைப் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படும்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App