சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 466 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 37 ஆகவும், சென்னையில் 23 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் எந்த வகையில் நடத்தப்படவுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் பொதுத் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 3,275 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 19,719 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,010 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 189.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App