English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: May 2022

தேனி: துப்புரவு பணியாளர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

துப்புரவு பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்துவதையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கைவிடுமாறு நீதிகேட்டு தேனி பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில்…

நாமக்கல்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஓடினர். உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே…

வயது உயர்த்தப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் பணி ஓய்வு: ஒரேநாளில் 5,300 பேருக்கு ஓய்வு

ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில் இன்று ஒரே நாளில் சுமார் 5,300 பேர் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம்…

கருக்கலைப்புக்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை; மாதவிடாய் விடுமுறை: சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் ஒப்புதல் | In Europe’s first, Spain aims to introduce paid menstrual leave

16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோலவே, மகளிர்க்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுமுறை வழங்க வழிவகை செய்துள்ளது. தங்களின் உடல்…

“பலூன் வெடிச்ச அந்த விபத்தை நினைச்சா இப்பவும் அதிர்ச்சியா இருக்கு!" – நடிகை லைலாவின் பர்சனல்

லைலா என்றால் சிரிப்பு! திரைத்துறையில் சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த லைலா, தன் கலகல சிரிப்பால் எல்லோரையும் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து, அமைதி அமைதி அமைதியோ அமைதியாக இருந்தவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீ-என்ட்ரிக்குத் தயாராகியிருக்கிறார்.…

பாண்டிச்சேரி டி10 கிரிக்கெட் | கடைசி ஓவரில் 24 தேவைப்பட வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் | pondicherry t10 cricket 24 of 6 balls batsman scored 4 sixers domestic cricket

துத்திப்பட்டு: பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார் பேட்ஸ்மேன் ஒருவர். அதன் மூலம் அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தான்…

விளாத்திகுளம்: மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த 15 ஆடுகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமத்தில் 15 ஆடுகள் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்த முனியசாமி-சுப்புலட்சுமி தம்பதியினர் 30-க்கும் மேற்பட்ட ஆடு…

நெல்லை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்

வீட்டில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் திமுக பிரமுகரின் தம்பி படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவர் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகவும் 1வது வார்டு திமுக கவுன்சிலராகவும்…

திருச்சி: யாசகம் பெற்ற பணத்தில் இலங்கை தமிழர்கள் துயர்நீக்க தானம் வழங்கிய யாசகர்

தனக்காக யாசகம் கேட்பவர்களுக்கு மத்தியில், தான் யாசகமாக பெற்றதை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க நிதியாக வழங்கியுள்ளார் தூத்துக்குடி யாசகர் ஒருவர்.  தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் புல்பாண்டியன். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று வாழ்ந்துவரும்…